Friday, May 22, 2009

உயிருடன் உள்ளார் பிரபாகரன்

உயிருடன் உள்ளார் பிரபாகரன்


ஊடகங்களில்ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில்தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதிசனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத்தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள்.


நெருங்கிவரும் சிங்கள ராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத்தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம். புலிகளுக்கேயுரிய போர்வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமானசிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின்சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் ராணுவத்தினரால் கொல்லப்பட,புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது.


களத்தில்இழப்புகள் சகஜமானதுதான் என்பதைப் புலிகள் அறிவார்கள். ஆனால், தங்களின்இலட்சியமான தமிழீழத் தாயகம் அமைவதற்கு எதை இழக்கவேண்டும் எதைக் காப்பாற்றவேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாக இருப்பார்கள். அதனால், மே 17-ந்தேதியன்று புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும், தங்களுக்கு வழக்கமாகக்கட்டளையிடும் பிரபாகரனிடம், கோரிக்கை வடிவில் ஒரு கட்டளை பிறப்பித்தனர்என்கிறார்கள் தொடர்பில் உள்ள வட்டாரத்தினர்.


தமிழீழத்தேசியத் தலைவர் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிய தருணம் இது.ஏணென்டால், சிங்கள ராணுவம் தனது பாரிய படைகளோடு நெருங்கி விட்டது. இதுஇந்தப் போரின் இறுதிக்கட்டம். இதிலிருந்து தலைவர் அவர்கள் மீண்டால்தான்அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடியும். நம்முடைய இலட்சியமானதமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்று தளபதிகள் சொன்னதை பிரபாகரன்ஏற்றுக் கொள்ளவில்லையாம். நமது மண்ணின் விடுதலைக்காகத்தான் நான்போராடுகிறேன். அதனால் கடைசிவரை இந்த மண்ணில்தான் இருப்பேன் என பிரபாகரன்உறுதியான குரலில் கூற, தளபதிகள் அவரிடம் நீண்ட நேரம் வாதாடியுள்ளனர். இந்தமண்ணில் உங்கட மகன் நின்று போராடட்டும். எங்கட தலைவராகிய நீங்கள்பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டம்எழுச்சியோடு தொடரும் என்று தங்களுடைய கோரிக்கைக்கு அழுத்தம்கொடுத்திருக்கிறார்கள்.


தளபதிகளின்கோரிக்கையை யோசித்த பிரபாகரன், தனது மகன் சார்லஸ் அந்தோணியை ஈழமண்ணில்இருக்கச் செய்து போரை தொடர்ந்து நடத்தச் சொல்லிவிட்டு, தளபதிகள்கூறுவதுபோல, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற நீண்ட யோசனைக்குப்பின்சம்மதித் துள்ளார். இதையடுத்து,மே 17-ந் தேதி ஞாயிறன்று இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் ஈழநிலவரம்குறித்து சிங்கள அரசு பரப்பிய தகவல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த நேரத்தில், புலிகள் ஒரு பெருந் தாக்குதல் திட்டத்திற்குத்தங்களைத் தயார்படுத்தியிருந்தனர் என்கிறது கள நிலவரம். மிகச் சரியாகவியூகம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அந்தத் திட்டம் இதுதான் என்றும்அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


5000கிலோ வெடிமருந்துகளை தங்கள் உடலில் கட்டிக்கொண்டு 30-க்கும் அதிகமானகரும்புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் நடத்துவது என்ற திட் டத்தின்படிஇருவரணி, மூவரணியாக கரும்புலிகள் பிரிந்து, முன்னேறி வந்த சிங்களராணுவத்தினர் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தினர். விடுதலைப்புலிகளின்மற்ற படையணியினரும் சரமாரியாக சுட்டுக்கொண்டே ராணுவத்தை எதிர்த்துவீரச்சமர் புரிந்தனர்.


தொடர்ந்துமுன்னேற்றம் கண்டு வந்த சிங்கள ராணுவம் இதனை எதிர்பார்க்க வில்லை. தங்கள்உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தலைவரைப் பாது காப்பதற்கான ஊடறுப்புத்தாக்குதலில் ஈடுபட்ட புலிகளை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை.இருதரப்பிலும் கடும் சண்டை நடந்த அவ்வேளையில், வெடிமருந்துகளுடன் பாயும்புலிகளைக் கண்டு ராணுவம் சிதறியது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி,பிரபாகரனை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர் தளபதிகள்.


புலிகளின்வசமிருந்த கடல்பகுதியில் போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப் பட்டிருந்தகோட்டை ஒன்று உண்டு. அந்தக் கோட்டைக்குள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர்.அந்தக் கோட்டையின் கீழ்ப் பகுதியில் பழையகாலத்து சுரங்கப்பாதை உள்ளது.அந்த சுரங்கப்பாதை வழியாக பிரபாகரனை முள்ளிவாய்க்கால் கடற் பகுதிக்குஅழைத்துச்சென்றனர். அங்கே கடற்புலிகளின் படகு தயாராக இருந்தது. அதில்பிரபாகரனை ஏறச் செய்தனர்.அதேவேளையில்,வன்னிக்காட்டில் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அப்போது, இன்னொருதற்கொலைப் படையும் படையணியும் வீரம் செறிந்த தாக்குதலைத் தொடர்ந்தது.மீண்டும் ராணுவத்தினர் சிதற, அந்தத் தருணத்தில் பொட்டு அம்மான்பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அப்போது திறம்படக் களமாடியவர் சார்லஸ்அந்தோணி.


புலிகளின் தாக்குதலில் சிதறி ஓடுவதும், மீண்டும் ராணுவம் தாக்கவருவதுமாக வன்னிக் களம் அதிர்ந்து கொண்டிருந்த நிலையில், கடற்புலிகளின்தளபதியான சூசையை பாதுகாப்பாக வெளியே அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தன்குடும்பத்தின் மீது அதிகப் பாசம் கொண்டவர் சூசை. அவரது மனைவியும் 17 வயதுமகளும் ராணுவத்தின் பிடியில் சிக்கி சில நாட்கள்தான் ஆகின்றன. மனதைகல்லாக்கிக்கொண்டு, இலட்சி யத்தின் அடுத்த கட்டத்தை அடைவதற்காகபாதுகாப்பாக வெளியேறினார் சூசை.


புலிகளின்அடுத்தடுத்து 23 தற்கொலை தாக்குதல் சம்பவங் களால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் செத்து விழுந்தனர். இந்தத் தாக்குதல்களைமுன்னின்று நடத் திய பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, சிங்களராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாகி களப்பலி யானார். புலிகளின் கடைசிநேரஅதிரடித் தாக்குதல், சிங்கள ராணுவத்தின் 58-வது டிவிஷனை நிலைகுலையவைத்தது.


புலிகள் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற பயபீதியில்ராணுவத்தினர் சிதறி ஓடினர்.வன்னிக்காடு புகை மண்டலமானது. கடைசி இலக்கைநெருங்கிவிடலாம் என நினைத்த ராணுவத்தின் கண்களை கரும்புகை மறைத்து,முன்னேற் றத்தை முடக்கியது.இதனால்பிரபாகரனையும் பொட்டு அம்மான், சூசை ஆகி யோரையும் பாதுகாப்பாகவெளியேற்றுவது சாத்திய மானது. அவர்கள் தனித்தனி படகில் ஒருவர் பின்ஒருவராகப் பயணித்தனர். கடற்புலிகள் பயன் படுத்தும் படகுகளின் வேகம் சிங்களராணுவத்தை மிரள வைக்கக்கூடியது. உதாரணத்திற்கு, ராமேஸ்வரத்திலிருந்துஇலங்கைக்குச் செல்ல வேண்டுமென்றால் 12 நிமி டங்களில் அந்தப் படகின்மூலமாகச் சென்று விட லாம். மின்னல் பாய்ச்சலில் செல்லும் அத்தகையபடகுகளில் பிரபாகரனும் முக்கியத் தளபதிகளும் பயணித்து, இலங்கையி லிருந்துகிழக்குத் திசை நோக்கி 3 மணி நேரப் பய ணத்தில் பாதுகாப்பான இடத்தைஅடைந்துள்ளதாக கள நிலவரங் கள் தெரிவிக்கின்றன.


சிங்களகடல் எல்லைக்குட்பட்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வதுபுலிகளுக்கு கைவந்த கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில்இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற்படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட முடியுமா என்ற தயக்கம்புலிகள் தரப்பிலேயே இருந் திருக்கிறது. ஆனால், இந்தியக் கடற்படைக்குஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும்படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு.பலவித பிரஷர்களால் இந்த உத்தரவு இடப்பட்டிருந்தது. அதனால், அந்த மின்னல்வேகப்படகு சீறிச் சென்றபோது, மேலிடத்து உத்தரவுக்கேற்ப இந்தியக் கடற்படைதனது செயல்பாடுகள் எதையும் மேற்கொள்ளவில்லையாம்.


ஞாயிறன்றுபுலிகள் மேற்கொண்ட இந்த வெற்றிகரமான ஊடறுப்புத் தாக்குதலுக்குப்பிறகுதான், திங்கட்கிழமையன்று காலையில் கடைசி நிலப்பரப்பையும்பிடிப்பதற்கான கொடூரத்தாக்குதலை சிங்கள ராணுவம் மேற்கொண்டது. பீரங்கிகள்,எறிகணைகள் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியபடியேமுன்னேறிய ராணுவம், பிரபாகரன் தங்கியிருப்பதாகத் தங்களுக்கு தகவல் வந்தபகுதியில் சகட்டுமேனிக்குத் தாக்குதல் நடத்தி கரும்புகை மண்டல மாக்கியது.எஞ்சியிருந்த புலிகளையும் அப்பாவி மக்களையும் சிங்கள ராணுவத்தின்ஆயுதங்கள் உயிர் குடித்தன.


அந்தத்தாக்குதலின்போதுதான், குண்டு துளைக்காத கவசம் கொண்ட ஒரு ஆம்புலன்ஸ்வண்டியில் பிரபாகரனுடன் பொட்டு அம்மான், சூசை ஆகியோர் தப்பிக்கமுயன்றதாகவும் அந்த வண்டிக்கு முன்னால் ஒரு வாகனத்தில் வந்த புலிகள்,ராணுவத்தை நோக்கித் தாக்குதல் நடத்தியதாகவும், பதில் தாக்குதலாக ராக்கெட்லாஞ்சர்களை ராணுவம் ஏவியபோது, பிரபா கரனும் தளபதிகளும் சென்ற ஆம்புலன்ஸ்வண்டி தாக்கப்பட்டு மூவரும் கொல்லப் பட்டதாகவும் சிங்கள அரசுமீடியாக்களுக் குப் பரப்பியது. அதனை இந்தியாவின் ஆங்கில சேனல்கள்நொடிக்கொரு முறை பரப்பிக் கொண்டி ருந்தன. ஞாயிறுஇரவி லும் திங்கள் காலை யிலும் சிங்கள ராணுவம் நடத்திய கொடூரத்தாக்குதலில் புலிப்படையினர் பெரு மளவில் பலியாயினர். பிரபாகரன் உள்ளிட்டஅனைத்து தளபதி களின் கதையையும் முடித்துவிட்டோம் என சிங்கள அரசுகொக்கரித்துக் கொண்டிருந்தது.


புலிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக பிரணாப்முகர்ஜியைத் தொடர்புகொண்டு ராஜபக்சே தெரிவித்தார்.பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என இந்திய வெளியுறவுத்துறையும் நம்பியது. இதனை அத்துறையின் செய்தி தொடர் பாளரே பிரஸ் மீட்டில் தெரிவித்தார். வன்னிக்காட்டில்சிதறிக் கிடந்த புலிகளின் உடல்களை ராணுவத்தினர் வரிசையாக அடுக்கிவைத்திருந் தனர். சில உடல் கள் கருகியிருந்தன. பிரபாகரன் உள் ளிட்டபுலிகளின் முக்கியத் தலைவர் களை அடையாளம் காண்பதற்காக கருணாவைகொழும்பிலிருந்து தனி ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது சிங்கள ராணுவம்.புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்த கருணா,அவர் கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற தகவலைக் கேட்டு,உற்சாகமாகத்தான் காட்டுப்பகுதிக்கு வந்தார். வரிசையாகக் கிடத்தி வைக்கப்பட்டிருந்த சடலங்களைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி. சிங்களராணுவம் கொன்றதாகச் சொல்லப்பட்ட புலிகளின் தளபதிகளில் ஒருவரின் உடலைக்கூடகருணாவால் அங்கு பார்க்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டுத்திரும்பிய கருணா, "மொக்கச் சிங்களனுங்க கோட்டை விட்டுட்டானுங்க' எனத் தனதுசகாக்களிடம் சொல்லி யிருக்கிறார்.


இந்தநிலையில், செவ்வாயன்று காலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றியஅதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எதுவும்சொல்லாதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பகல் 12 மணியளவில்,நந்திக்கடல் பகுதியில், தலையில் சுடப்பட்ட பிரபாகரனின் உடல் கிடந்ததாகசிங்கள ராணுவம் அறிவித்து, தான் எடுத்த சில க்ளிப்புங்கு களைமீடியாக்களுக்குக் கொடுத்தது. பிரபாகரனின்தோற்றத்தை விட மெலிந்திருந்தது உடல். அவர் கையில் எப்போதும்கட்டியிருக்கும் வாட்ச் இல்லை. கழுத்தில் கயிறு அணிந்து பாக் கெட்டில் சயனைடு குப்பி வைத்தி ருப்பது வழக்கம். ஆனால், சிங்கள ராணுவம் காட்டியபடத்திலோ சயனைடு குப்பி இல்லை. ஐடென்ட்டி கார்டு காட்டப்பட்டது. இப்படி பலமுரண்பாடுகளைக் கொண்ட க்ளிப்புங்கு களைக் காட்டியதுடன், மதியம் கண்டுபிடிக்கப்பட்ட உடலை ஒரு சில மணிநேரத்தில் டி.என்.ஏ சோதனை மூலமாகஉறுதிப்படுத்தி விட்டதாகவும் சிங்கள அரசு தம்பட்ட மடித்தது.


தண்ணீரில்கிடந்த உடல் எனச் சொல்லப்பட்ட நிலையில் கைகள் மட்டும் ஊறியிருக்க, முகம்நன்கு ஷேவ் செய்யப்பட்ட நிலையில் மொழுமொழுவென இளவயது பிரபாகரன் போல்இருந்தது. இது எப்படி சாத்தியம் என்பதை தசாவதாரம் படத்தில் மாஸ்க் அணிந்தகமலை பத்து கெட்டப்புகளில் பார்த்த தொழில்நுட்பம் அறிந்தவர்களால் விளக்கமுடியும் என்கிறார்கள் தடயவியல் துறையினர்.சிங்களஅரசின் பிரச்சாரத்தை ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்தவேளையில், நக்கீரனின் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் கிடைத்திருக்கும்உறுதி யான தகவல், உலகத் தமிழர்களின் நேசத்திற்குரிய விடுதலைப்புலிகளின்தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுதான். பிர பாகரனின் மனைவி,மகள், இரண்டாவது மகன் ஆகியோர் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளனர். தன்னுடையபாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர ஏற்படுத்திக்கொண்டபிறகு , பிரபாகரனேஊடகத்தில் தோன்றி உரையாற்றுவார்.


அதுவரை சிங்கள ராணுவம் தனது தரப்புச்செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கும். பிரபாகரன் ஊடகங் களில் உரையாற்றும்போதுசிங்கள அரசின் மாஸ்க் முகம் அம்பலத்திற்கு வரும் என்கி றார்கள் மிகமிகமுக்கியமானவர்கள். நக்கீரனுக்கு கிடைத்துள்ள இந்தத் தகவல், ஆயிரம் மடங்குநம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களிடம் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


நன்றி: நக்கீரன் நாலிதழ்.

Friday, May 15, 2009

எனை யாசிப்பவன்...


சோர்ந்த போது தலை சாய்க்க

ஒரு தோள்,


துயரத்தைத் தூரவிட்டு விழி நீர்

துடைக்கும் விரல்கள்,


வெற்றியின் போது கட்டியணைக்கும்

அன்பு கரங்கள்.



அன்னையாக, தந்தையாக, அண்ணனாக, தோழனாக, குருவாக

என் குழந்தையாக - என்றும் என்னவன்,

என்னை நொடிக்கொரு முறை ஏங்க வைப்பவன்

என்னருகே இனியவன் - என் பிரியமானவன்,

நால்வகை குணங்களை ஒருங்கே அரங்கேற்றி

உடல், பொருள், ஆவியை உறைவித்தவன் – என் வித்தகன்,

பெண்மையின் நாணங்களைத் தொலைத்து

அவனிடத்தில் தாய்மையை உணர செய்தவன் – என் கலைதேவன்,

என் நிழலையும் தொடரும் நிஜமானவன்

ஏழேழு பிறவியும் என் துணையானவன் - எனக்கே எனக்கென்று ஒருவன்!!!

 

மங்கையின் மலர்மனம் மன்னவனிடத்தே மயங்கிக்கிடக்கும்,

பாவையிவள் பார்வை பாதச்சுவடினைப் பார்த்திருக்கும்,

காத்திருப்பேன் காலடிச்சேரும் காலத்தினைக் கண்ணிமைக்குள் கணக்கிட்டு!!!

Monday, May 11, 2009

தாய்





தாய் தான் எல்லாவற்றிற்கும் மூலாதாரம்.எவள் இல்லை என்றால் நாம் இந்த உலகில் பிறந்திருக்கமுடியாதோ,எவளை நாம் இழந்து விட்டால் மீண்டும் பெற முடியாதோ அவளே தாய். அவளே நம் வாழ்க்கையின் அனைத்து தத்துவங்களையும் துவக்கி வைக்கிறாள்.   தாய் என்ற ஸ்தானத்தில் இருந்து தான் சகலமும் உருவாகிறது.

 




·         தாய் – தாய் தான் ஜனனத்தை தோற்றுவிக்கிறாள்.

·         தாய் – தந்தை, குரு, கடவுள் மற்றும் உறவுகளை அறிமுகப்படுத்துபவள்.

·         தாய் – எந்த ஒரு தவறான செயலிலும் தடைவிதிப்பவள்.

·         தாய் – மழலைப் பருவத்தில் பேசும் முதல் வார்த்தை ‘அம்மா’.

·         தாய் – உள்ளுணர்வால் உந்தப் பெற்ற தத்துஞானி.

·         தாய் – ‘வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்ற இராமலிங்க அடிகளார் பாடல் வரிகளைப் போல நமது ஒவ்வொரு துன்பத்தின் போதும் முதலில் கண்ணீர் சிந்துபவள்.

·         தாய் – தனது குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் முன்னேற்றம் காண்பவள்.

·         தாய் – தனது கருவறையில் வைத்து பத்து மாதம் உணவு ஊட்டக் கூடியவள். தாய்மை. தனது பிரசவ வலியில் இருக்கும் போது கூட வயிறு வலிக்கிறது என்று கூறாமல் குழந்தை என்னை உதைக்கிறது என்று கூறக்கூடிய பெருந்தகையவள்.


தாய், தாய்மை பற்றி இலக்கியங்கள் கூறுவது:

·         தாய், தந்தை பேண் – (பேண் – விரும்பு. தாய், தந்தையைய் விரும்பு).

·         விண்ணுலகம் மண்ணுலகம் இரண்டும் பெண்ணுலகத்தாலேயே வாழ்கிறது. பெண் இல்லை என்றால் இவ்வுலகமே இல்லை என்கிறது.

·         தாய்நாடு – நாம் நம் நாட்டை ‘தாய்நாடு’ என்று தான் கூறுகிறோம்.

·         தாய்மொழி – நாம் பேசுகின்ற மொழியைய் கூட ‘தாய்மொழி’ என்று தான் கூறுகிறோம்.

·         ‘மாத்துரு தேவோ பதே பித்தரு தேவோ பதே’ – அம்மாவை சொல்லிதான் அப்பாவை சொல்லனும். அம்மா காட்டித்தான் குழந்தைக்கு அப்பாவைத் தெரியும். குரு நமஹ. அப்பா குருவை காட்டிய பின்பு தான் குருவை அறிவோம். இங்கு சந்தேகத்திற்கு  இடமில்லாதது தாய்.

·         அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.

·         அம்மையே அப்பா ஒப்பிலா மணியே.

·         தந்தையைய் பார்க்கினும் தாய்க்கு பெருமை அதிகம்.

·         மகன் சந்நியாசி ஆனப்பிறகும் வணங்கத் தக்கவள் தாய்.

·         சிவத்துக்கு ஒரே இராத்திரி சிவராத்திரி. சிவராத்திரி அன்று பட்டினி போடுவார்கள். சக்திக்கு ஒன்பது இராத்திரி நவராத்திரி. தாய் ஒரு பொழுதும் தன் குழந்தையைய் பட்டினி போட மாட்டாள். ஆகையால் தான் நவராத்திரி அன்று இரவு பொங்கல், புளியோதரை என்ற சகல உணவுகளும் கோயில்களில் வழங்கப்படுகிறது.

·         காலிலே மிதிபடுகிற மண்ணை பூமாதேவி - இந்த பூமியைய் தாங்கக் கூடியவள் பெண்.

·         இன்று வரை மேற்கு வங்காள மாநிலத்தில் தாயைய் தட்டிலே நிறுத்தி அவளது காலை சுத்தம் செய்து‘பாத பூஜை’ செய்கிறார்கள். அந்த கால் அலம்புகின்ற தண்ணீரை கங்காதேவி, ஆகாசவானி, கிரகலட்சுமி, தான்யலட்சுமி என்று கூறுகிறார்கள்.

·         திருமணத்திற்காக பெண் பார்க்கும் போது கூட நேராக யாரும் பெண்ணைப் பார்ப்பது கிடையாது.‘தாயைய் பார்த்து பெண்ணெடு’ என்று தான் கூறுகிறார்கள். ஒரு தாய் எப்படி இருக்கிறாளோ அதை வைத்து தான் அவள் வளர்க்கிற அந்த பெண்ணை பார்க்கிறார்கள்.


தாய்மை பற்றி கண்ணதாசன் கூறுவது:

·         நான் என் தாயைய் வணங்குகிறேன். எனது வாழ்க்கைக்கு மனைவி ஒருத்தி துணையாக வந்து இருப்பாலேயானால் நான் வணங்குகின்ற என் தாயைய் அவளும் வணங்கி ஆக வேண்டும்.

·         என் தாய் என்பவள் என் குடும்பத்தின் இராணி. அந்த ராணிக்குத் தோழி தான் என் மனைவி. அந்த மனைவி என்பவள் இராணி என்கிற அந்தஸ்த்தை ஒரு போதும் பெற முடியாது. அவளுக்கு வருகின்ற மருமகளுக்கு வேண்டுமானால் அவள் இராணியாக இருக்கலாமே தவிர என் தாயிக்கு கிடையாது.


தாய்மை பற்றி சுவாமி விவேகானந்தர் கூறுவது:

·         அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் பேசுகையில் ‘தாய் மார்களே’ என்று தனது சொற்பொழிவை ஆரம்பித்தார். அப்பொழுது அங்கு இருந்த சில இளம்பெண்கள் சிரித்தார்கள். நாங்களோ இளம் பெண்கள், நமக்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. நம்மைப் பார்த்து ‘தாயே’ என்று கூறுகிறாறே என்று சிரித்தார்கள். மேலை நாடுகளில் பெண் என்றாலே ‘மனைவி’ அல்லது ‘காதலி’ என்ற உணர்வுதான் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் எங்கள் நாட்டைப் பொறுத்தவரையில் பெண் என்றால் தாய் என்ற உணர்வு தான் வரும். தாய், தாயே என்று அழைப்பது எங்களது வழக்கமாகும்.

·         பதினெட்டு வயது பெண்ணைப் பார்த்து அறுவது வயது முதியவர் பிச்சைக் கேட்கும் போது கூட ‘தாயே’என்று தான் கேட்கிறார். ஏன், ஏழு வயது சிறுமியைய் பார்த்துக் கேட்கும் போது கூட ‘தாயே’ என்று தான் கேட்கிறாரே தவிர ‘சிறுமியே பிச்சை போடு’ என்று கேட்பது இல்லை. இது எங்களது தாய்மையைய் உணர்த்துகிறது.


திருக்குறள் கூறுவது:

          தற்காத்துத், தற்கொண்டான் பேணித், தகைசான்ற

            சொற்காத்துச், சோர்வுஇலாள் பெண்.


விளக்கம்: உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் செலுத்தி, குடும்பத்திற்கு நலம் தரும் புகழைக் காத்து, அறத்தைக் கடைப்பிடிப்பதில் சோர்வடையாமல் இருப்பவளே பெண்.


            "தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை!!!"





* படித்ததில் எனக்கு பிடித்தது...அன்னைக்கு நிகர் அவளே!!! 


Thursday, May 7, 2009

என்ன இது???








மிக உன்னதமான, மகத்தானது தான்

உயிர் தரும் கடமையாயிற்றே….

மண்ணில் ஒரு விதை முளையெடுக்க

எத்தனை எத்தனை காவல்கள்

இது உள்ளுக்குள் விதைந்து வளரும் புது ஜீவன்

உணர்ச்சி பல யூகிக்கும் பிண்டம்…

தந்தை உயிர் தர, தாய் தன்னில் மீதியைத் தந்தாள்…

தேகம் ஒன்றில்… ஜீவன் ரெண்டு… மூச்சு ஒன்று…

 

பிரபஞ்சத்தை கிழித்தெரிக்கும் 

கட்டுக்கடங்கா உணர்ச்சிகளின் இணைப்பு,

பாரில் விழித்தெழும் புது இணைப்பு,

இறைவன் பெண்மைக்கு மட்டுமே

அளித்த தித்திக்கும் பிரசாதம்…

தாய்மை சுகமான சுமை

தாய்மனதை அந்த பிஞ்சும் உணர்கிறது…

செல்வம் கோடி சேர்த்திருப்பினும்

இந்த பந்தத்திற்கு – தாய்மைக்கு – ஈடேது?!

 

பத்து திங்களும் புத்தம் புது ஜென்மம்

புது பிறவி எடுக்கிறாள்…

மசக்கையுற்ற மேனிதனை

காத்து சேவகம் செய்து

பட்டும் படாமல் உண்டுறங்கி

கால்களின் விரல்களைக் கூட மறக்கிறாள்

தாய்மை திரையிட்டு இருப்பதால்…

சின்ன சின்னதாய்

உயிர் கசியும் வலிகள்

நொடிக்கொரு முறை

செல்ல உதைகள்

ஒரு சுவாசம் போதாமல்

நொடிக்கு இரண்டானது

விரல்களின் செல்ல வருடலில்

சின்னவனின் குட்டி உறக்கம்…

இவள் இதய வானில் நொடிப்பொழுதில்

கோடி வர்ணங்களில் அழகிய ஜாலங்கள்!

விழி நுனியிலும் நெஞ்சுக்கூண்டிலும்

இன்னும் ஈரமாயிருக்கும் மோகன தருணங்கள்!

சிங்கார கண்ணனவன் சீதனமாய் தந்த

அன்பு மிளிரும் உறவிது,

தாய்மையின் மேன்மைதனை

மின்னச் செய்யும் ஆழமான உணர்விது!

 

பாவையவள் மென்மையானவள்,

பூப்பெய்யும் போது

பெண்மையின் இரகசியத்தை அறிகிறாள்!

ஆண்மை ஆட்கொள்ளும் போது

பெண்மையின் குணங்களை உணர்கிறாள்!

தாய்மையைச் சுவாசிக்கும் போது

மங்கையர் பிறப்பின் மகத்துவத்தையும்

வாழ்வின் முழு அர்த்தத்தையும் நுகர்கிறாள்!

 

தாய்மை,

பலருக்கு வாய்ப்பதில்லை,

சிலருக்கு நிலைப்பதில்லை,

பெற்றவர்கள் பாக்கியவதிகள்,

உணர்கின்றவர்கள் உன்னதமானவர்கள்,

பெற்றுணர்ந்து மெய் சிலிர்க்க காத்திருப்போர்

தாய்மையின் சின்னங்கள்!

 

ஆண்களே,

உங்களிடத்திலும் தாய்மையுண்டு,

பெண்ணை நேசித்து மனதில் சுமக்கிறீர்,

காதலை சுவாசிக்கிறீர்,

திருமணம் உங்களுக்குப் பிரசவம் தினம்!

காதல் குழந்தையுடன் இனிதே வாழுங்கள்_






_அன்னையர் தின வாழ்த்துகள்_

_ மலர்விழி J





Wednesday, May 6, 2009

ஒரு விண்ணப்பம்...




















- மகனே, என் வாழ்வையும் உணர்வையும் உன்னோடு உனக்காக பகிர்ந்துள்ளேன்..


இறைவா உன்னிடம் ஒரு விண்ணப்பம்,

என்னுள் விளையும் இவன்

வெண்மையான இதயம்,

கருணை விழிகள்,

கொடுக்கும் கரங்கள்,

முட்பாதை மீதும் நடக்கும் துணிவு,

என்றென்றும் தன்னம்பிக்கை,

எந்நாளும் நற்சிந்தை,

சோர்ந்து போகா மனம்,

குன்றாத நேசம்,

குறைவில்லா புன்னகை,

திகட்டாத பண்பு,

தாய்ப்பால் சுவைத்த அவன் நா,

தமிழையும் உயிராய் மதிக்கட்டும்!


இறைவா,

இதில் குறையேதும் விழைத்து விடாதே,

என் தங்கம் பார் வணங்கும் மகானாக வேண்டாம்,

பிறர் போற்றும் அறிஞனாக வேண்டாம்,

நல்லொழுக்கம் கொண்ட தமிழ் மகனாய் தவழட்டும்,

பெண்ணியத்தை மதிக்கும் பெருந்தன்மையை அவனுக்குத் தா!

உன் அருளே அவனுக்கு நான் பெற்றுத்தரும் பெருஞ்செல்வம்!!!

 

    Ø  கொஞ்சம் நப்பாசைக் கொண்ட தாயுள்ளம் J


புது உறவு...









தள்ளாடி தத்தி நடக்கும் போது

உனை நான் கரங்களால் தாங்க,

எனை மெருதுவாய் மெல்ல

சுமந்தவரடா உன் தந்தை,

ஆணா பெண்ணா என்ற வினாக்களுகிடையே

எங்களின் ஊடல் உனை வருத்துமென்று

அமைதி காத்து, விழிகளின் வில் சண்டை செய்தோம்...

எனக்குள் நீ நடத்தும் அதிரடி யுத்தங்கள்

என் செல்களில் இனம் புரியா தாக்குதல்கள்

நீ எனக்களித்த இன்ப வலிகளவை!

 

என் உயிருக்குள் ஓருயிர்,

உன் அப்பாவைத் தவிர்த்து

நான் சுமக்கும் மற்றொரு ஜீவன்

என்னில் ஒரு பாதி – நீ,

இருவராக மட்டுமே வாழ்ந்த எங்களுக்கு

புதிய வாழ்வைக் காட்ட வந்த தேன் சிட்டு

இறைவன் எங்களுக்களித்த உயிருள்ள சீதனம்

புன்னகைக்கும் விண்மீன் – நீ,

எங்கள் வாழ்வின் முழுமை - உன் வருகை!


  Ø  தாயுள்ளம் J