Sunday, April 12, 2009

உன்னால் முடியும் பெண்ணே!


பாரதி கண்ட கனவுகள்...
புதுமை, இலட்சிய பெண்கள் பாரில் சரித்திரம் படைத்தனர்...
பார் போற்ற வாழ்ந்தும் வாழ்ந்துக்கொண்டும் உள்ளனர்...
அழகு பெண்ணே,
மனதிலும் ஒழுக்கத்திலும் அழகுக்கொள்,
உன்னை வெல்ல ஒருவராலும் முடியாது,
பல ஆணின் வெற்றிக்கு நீ பாதை அமைத்தாய்,
உன் மனமே, உன் வெற்றியின் அடித்தளம்!

ஆண்...எதிர்காலத்தைக் கனவு காண்பான்,
பெண்ணோ, கனவுகளோடு ஜனனம் கொள்கிறாள்!
உன் கனவுகள் நிஜமாக, உன் நிழலாக தொடர வேண்டும்!

ஒவ்வொரு தாயும் தன் மகளை
இலட்சிய பெண்ணாக வளர்க்க வேண்டும்!
_இன்னும் அறிவியலுக்கு ஒரு கல்பனா,
அரசியலுக்கு ஓர் இந்திரா காந்தி,
மனித நேயத்திற்கு ஓர் அன்னை திரேசா பிறக்க வேண்டும்_
சமைக்கின்ற கரங்கள் சரித்திரம் படைக்கட்டும்!

________
ஆக்கம்,
மலர்விழி

2 comments:

  1. hi malar
    good morning
    how are u
    very nice kavithai
    ur excellent
    very nice blogs
    i am really appriciate yr search blogs
    thank u malar

    ReplyDelete
  2. மலர்விழிApr 13, 2009, 5:58:00 PM

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி முத்து :)

    ReplyDelete